ஐயப்பா ஆசிரமத்தில் மண்டலபூஜை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

504பார்த்தது
ஐயப்பா ஆசிரமத்தில் மண்டலபூஜை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
சேலம் ஸ்ரீசாஸ்தாநகரில் உள்ள அய்யப்பா ஆசிரமத்தில் வருகிற 17-ந் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகிறது. இந்த பூஜை ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும். மண்டல பூஜையுடன், உற்சவ பூஜை, மகரஜோதி, திருஆபரண தரிசனம் ஆகியனவும் நடைபெறும். இந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியாக மண்டல பூஜைக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அய்யப்பனை வழிபட்டனர். அறக்கட்டளை தலைவர் கே. பி. நடராஜன், செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவண பெருமாள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி