சேலம்: வசதி குறைந்த தம்பதிகளுக்கு திருமணம் செய்து சீர்வரிசை

84பார்த்தது
சேலம்: வசதி குறைந்த தம்பதிகளுக்கு திருமணம் செய்து சீர்வரிசை
சேலம் ஸ்ரீவாசவி மகிளா சமாஜம் சார்பில் வாரணம் ஆயிரம் என்ற திருமண நிகழ்வு சேலம் ஸ்ரீவாசவி சுபிட்சா ஹாலில் நடந்தது. வசதி குறைந்த வைஸ்ய தம்பதிகளுக்கு 60-ம் திருமணம் (சஷ்டியப்த பூர்த்தி), 70-ம் திருமணம் (பீமரத சாந்தி), 80-ம் திருமணம் (சதாபிஷேகம்) என ஒவ்வொரு வயது பிரிவிலும் தலா 5 பேர் என 15 ஜோடிகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. அவர்கள் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வு குறித்து மகிளா சமாஜம் தலைவி யாமினி முருகன் கூறுகையில், எங்களது மகிளா சமாஜம் 45 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, மருத்துவ உதவி மற்றும் உலக நன்மைக்காக பல்வேறு பூஜைகள், வசதி குறைந்தவர்களுக்கு இறுதி சடங்குகளுக்கான உதவி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கி வருகிறோம். அதற்கு முத்தாய்ப்பாக இந்த திருமண நிகழ்வை நடத்தி உள்ளோம் என்றார்.