சேலம் அரசு ஆஸ்பத்திரியில், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம்களுக்காக தமிழக சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து 124 பேர் ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது.