சேலம் கலெக்டர் ஆபிசில் 9 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர்ணா

71பார்த்தது
சேலம் கலெக்டர் ஆபிசில் 9 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தர்ணா
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டி அய்யர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 70), விவசாயி. இவரது தலைமையில் அவரின் உறவினர்களான 9 குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். 

பின்னர் அவர்கள் நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாதேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, '80 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் அனுபவித்து வரும் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை தற்போதுள்ள காடையாம்பட்டி தாசில்தார் வழிபாட்டுத் தலம் கட்டும் பணிக்காக கொடுக்க உள்ளதாகத் தெரிகிறது. இதனால் எங்களது 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. 

ஏற்கனவே அங்கு 2 கோவில்கள் உள்ளன. மேலும், அந்தப் பகுதியில் 50 செண்ட் புறம்போக்கு நிலம் இருப்பதால் அதனை அளவீடு செய்து வழிபாட்டுத் தலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எனவே நாங்கள் அனுபவித்து வரும் கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்திற்கு எங்கள் பெயரில் பட்டா வழங்கி எங்களது குடும்பங்களை வாழவைக்க வேண்டும்' என்றார்கள்.

தொடர்புடைய செய்தி