சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மகளிர் அணியினருக்கான 'வெல்லும் தமிழ் பெண்கள்' பிரசார பயிற்சி கூட்டம் நேற்று நேரு கலையரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட உள்ள 'வெல்லும் தமிழ் பெண்கள்' பிரசாரம் குறித்து மகளிர் அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளித்தார். புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், சுய உதவிக்குழுவினருக்கு மானியக்கடன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும் என அவர் விளக்கினார்.