முதல்வர் சேலம் விழா; ஏற்பாடு குறித்து அமைச்சர்கள் ஆய்வு

63பார்த்தது
முதல்வர் சேலம் விழா; ஏற்பாடு குறித்து அமைச்சர்கள் ஆய்வு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சேலத்துக்கு வருகிற 11-ந் தேதி வருகிறார். அன்றைய தினம் அவர் மேட்டூர் செல்கிறார். 12-ந் தேதி காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். இதையடுத்து அவர் சேலம் இரும்பாலை ரோட்டில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 1,500 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்தும் வைக்கிறார். 

இதையொட்டி விழா நடைபெறும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம். செல்வகணபதி எம்.பி., போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சேலம் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேவிமீனாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி