சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் ஈச்சமரத்துக்காடு பகுதியை சேர்ந்த தமிழரசி (28) என்பவர், கணவர் சேகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்ற நிலையில், மனமுடைந்த தமிழரசி நேற்று முன்தினம் (மே 26) இரவு தனது மகள் சஞ்சனாவுக்கு (7) விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.