ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தாய், மகன் 2 பேருக்கு 2ஆண்டு ஜெயில்

0பார்த்தது
ஏலச்சீட்டு நடத்தி மோசடி: தாய், மகன் 2 பேருக்கு 2ஆண்டு ஜெயில்
சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சித்ரா (44) மற்றும் அவரது மகன் மணிகண்டன் (23) ஆகியோர் இணைந்து ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதில் பணம் கட்டிய திலகவதிக்கு (45) பணம் கொடுக்காதது தொடர்பாக, கடந்த 2014-ல் அவர் சேலம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். சேலம் 3-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், நேற்று விசாரணை முடிவடைந்து, சித்ரா மற்றும் மணிகண்டன் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you