தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் திறனாய்வுத் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் இத்தேர்வை 44 மையங்களில் 8,892 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.