சேலத்தில் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் ஊர்வலம்

0பார்த்தது
சேலத்தில் தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் ஊர்வலம்
சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 150-வது வந்தே மாதரம் நிகழ்ச்சியை முன்னிட்டு, தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. பாரதி வித்யாலயா பள்ளி, சாரதா கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, சோனா கலை அறிவியல் கல்லூரி, சோனா தொழில்நுட்ப கல்லூரி, சேலம் பொறியியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சீருடையுடன் பதாகைகள் ஏந்தி, நாட்டுப்பற்றை வலியுறுத்தும் முழக்கங்களை எழுப்பினர். பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தப் பிரம்மாண்ட ஊர்வலம் பள்ளியில் தொடங்கி அம்பேத்கர் சிலை வரை நடைபெற்றது. 12-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி ராஜீவ்குமார் ஆலோசனைப்படி, நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் ஏ. பிரகாஷ் மேற்பார்வையில், தேசிய மாணவர் படை சுபேதர் ஜெய்மன் ஜோஸ், ஹவில்தார் சண்முகம் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்கள், போலீசார் உடன் சென்றனர்.

தொடர்புடைய செய்தி