சேலம் பஸ் ஸ்டாண்டில் 10கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது

0பார்த்தது
சேலம் பஸ் ஸ்டாண்டில் 10கிலோ கஞ்சாவுடன் ஒடிசா வாலிபர் கைது
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு பள்ளப்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், கையில் பையுடன் கோவை செல்லும் பேருந்தில் ஏற முயன்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலால் குமார் (48) என்பவர், தனது பையில் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து கோவைக்கு கொண்டு செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி