சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 64). இவர் கடந்த ஜூன் மாதம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் அவர் சித்த மருத்துவ பிரிவு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வந்த பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இது குறித்து அவர் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை திருடியது களரம்பட்டியை சேர்ந்த நிசார் அகமது (66) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.