சேலத்தில் கார்கள் மோதி ஒருவர் பலி.. 3 பேர் காயம்

52பார்த்தது
சேலத்தில் கார்கள் மோதி ஒருவர் பலி.. 3 பேர் காயம்
திருச்செங்கோட்டைச் சேர்ந்த நடேசன் (65) என்பவர், தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை, பள்ளிக்குத் தேவையான பாடப்புத்தகங்களை காரில் ஏற்றிச் சென்றபோது, சேலம் சத்திரத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகம் அருகே, பழுதாகி நின்ற கார் மீது அவரது கார் மோதியது. இந்த விபத்தில் நடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில் வந்த இருவர் மற்றும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் என மொத்தம் 3 பேர் காயமடைந்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி