சேலம் அருகே ஒரு டன் போதை பொருட்கள் பறிமுதல்

1பார்த்தது
சேலம் அருகே ஒரு டன் போதை பொருட்கள் பறிமுதல்
சேலத்திற்கு சொகுசு கார்கள் மூலம் கடத்திவரப்பட்ட குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் வீராணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன தணிக்கையின் போது சுக்கம்பட்டி அருகே நிறுத்தப்பட்ட கார்களில் மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு கார்கள் மற்றும் ஒரு டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காரில் வந்த இருவர் தப்பியோடிவிட்டனர். வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி