தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கொங்கு முன்னேற்றக் கழகமும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகமும் ஆதரவு தெரிவித்துள்ளன. கொங்கு முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தங்கவேல் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவுக் கடிதத்தை வழங்கினர். இதன் மூலம் அதிமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றுள்ளது.