சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற ஆம்னி பேருந்து, இன்று காலை சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 27 பயணிகள் காயமடைந்தனர். விபத்து நடந்ததும், அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடி வந்து பயணிகளை மீட்டு, முதலுதவிக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனர்.