சேலத்தில் தவெக தலைவர் விஜய் டிசம்பர் 4ஆம் தேதியன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு தவெக சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 2026 தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து கடந்த 2 மாதங்களாக பரப்புரை செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.