சேலம் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள், மார்ச் மாதத்தில் இருந்து திட்டம் நிறுத்தப்பட்டதால் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 2021 முதல் மாதம் ரூ. 1,000 ஊதியத்தில் பணிபுரிந்து வந்த பெண்கள், கொரோனா காலத்திலும், பிற நெருக்கடியான நேரங்களிலும் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்ததாகக் கூறினர். இந்த பயனுள்ள திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.