சேலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து

2பார்த்தது
சேலத்தில் பெட்ரோல் பங்க் ஊழியருக்கு கத்திக்குத்து
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27) என்பவர் சூரமங்கலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் நிரப்ப வந்த இரு வாலிபர்கள் அவரிடம் மரியாதை குறைவாகப் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒரு வாலிபர் விஜய்யை தாக்கிவிட்டுச் சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அந்த வாலிபர்கள், விஜய்யை வெளியே இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கி, கத்தியால் அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டியுள்ளனர். இதில் விஜய் 7 இடங்களில் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். மற்ற ஊழியர்கள் வருவதைக் கண்ட வாலிபர்கள் தப்பிச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் விஜய்யை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி