மாற்றுத்திறனாளில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டம்

3பார்த்தது
மாற்றுத்திறனாளில் இரண்டாவது நாளாக மறியல் போராட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் அமலாராணி, மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆந்திரா, தெலங்கானா, தில்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படும் உதவித்தொகைக்கு இணையாக தமிழகத்திலும் ஊனத்தின் தன்மையை பொறுத்து உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி