பாமகசெயற்குழு கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ளதீர்மானம்

506பார்த்தது
பாமகசெயற்குழு கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்ளதீர்மானம்
சேலத்தில் நடைபெற்ற பாமக இளைஞரணி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், டிசம்பர் 12-ம் தேதி 10.5% இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நடைபெறும் வன்னியர் சங்க ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வருகிற 19-ம் தேதி திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டத்தில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கிய இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் செந்தில்குமார், தலைவர் தமிழ்குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.