சேலம் சீல்நாயக்கன்பட்டி பை-பாஸ் அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வருகிற 13-ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அனில் குமார் கிரியிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, அன்னதானப்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் வாசுதேவன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மைதானத்தை நேரில் ஆய்வு செய்து, வாகன நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் வருகைக்கான வசதிகள் குறித்து ஆராய்ந்தனர்.