சேலத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

6பார்த்தது
சேலத்தில் பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்பு போலீசார் விசாரணை
சேலம் பொன்னம்மாபேட்டை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 80 வயது ராமசாமி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்ததைக் கவனித்து, தாழை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு டேப் கட்டிலில் பாதி எரிந்த நிலையில் ராமசாமியின் சடலம் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி