சேலம் மத்திய சிறையில் கைதி திடீர் சாவு போலீசார் விசாரணை

4பார்த்தது
சேலம் மத்திய சிறையில் கைதி திடீர் சாவு போலீசார் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் (40) என்பவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கஞ்சா விற்ற வழக்கில் சேலம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை வார்டர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி