சேலத்தில் +2, 10 ம்வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள்

481பார்த்தது
சேலத்தில் +2, 10 ம்வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடு பணிகள்
சேலம் மாவட்டத்தில் வருகிற 2-ந் தேதி தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 153 மையங்களில் 36,713 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப்ளஸ் 2, எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வை முன்னிட்டு விடைத்தாளுடன் மாணவர்களின் பெயர், புகைப்படம் அடங்கிய முகப்பு தாள்கள் தைக்கும் பணி சேலம் கோட்டை பகுதியில் உள்ள மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் அந்தந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் மாணவ, மாணவிகளின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் முகப்பு தாள்கள் தைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி