சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக வெற்றிக்கழகம் சார்பில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சேலத்தில் நடைபெறுகிறது. இதற்காக சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் 10 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரும்பு கம்பிகள் மூலம் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதுடன், நுழைவுவாயில் முன்பும் அலங்கார வேலைப்பாடுகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.