சேலத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

1054பார்த்தது
சேலத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங் மற்றும் நர்சிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி