பள்ளப்பட்டி ஏரி பூங்கா கட்டண வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

5பார்த்தது
பள்ளப்பட்டி ஏரி பூங்கா கட்டண வசூலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம் பள்ளப்பட்டி ஏரி பூங்காவில் தனியார் மயம் மற்றும் கட்டண வசூலிப்பை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பூங்கா பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டதால், வாகன நிறுத்தத்திற்கு ரூ. 20, நுழைவு கட்டணமாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பூங்கா தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உள்ள நிலையில், இந்த கட்டண வசூல் பொதுமக்களை பாதிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி