இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் கூறி தமிழக வெற்றிக் கழகத்தினர் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.