சேலத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்

3பார்த்தது
சேலத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சேலம் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த மாதம் நாளை (சனிக்கிழமை) அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் பொது வினியோக திட்டம் தொடர்பான தங்கள் குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி