சேலம் மாநகராட்சி 58-வது வார்டுக்குட்பட்ட பார்வதி நகர் பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட சாலைகள் மண் சாலையாக இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தப் பிரச்சனையை சரிசெய்ய தார் சாலை அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் நேற்று கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.