புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சேலத்தில் சுவாமி தரிசனம்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்று, 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனது ஆன்மீக குரு அப்பா பைத்தியம் சாமியின் கோயிலுக்கு இன்று பிற்பகலில் வருகை தந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், அமைச்சரவை பட்டியலை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
