மாநகராட்சி பகுதிகளில் ரூ. 31 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி

3பார்த்தது
மாநகராட்சி பகுதிகளில் ரூ. 31 லட்சத்தில் மழைநீர் வடிகால் பணி
சேலம் மாநகராட்சியில் அம்மாபேட்டை மண்டலம், கோட்டம் எண் 32, காந்தி சிலை அருகில் மழைக்காலங்களில் வெள்ள நீர் திருமணிமுத்தாற்றில் கலக்கும் வகையில் கால்வாய் இணைப்பு பணிக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், அஸ்தம்பட்டி மண்டலம், கோட்டம் எண் 4, கணக்குப்பிள்ளை தெரு பகுதியில், 15ஆவது மத்திய நிதிக் குழு 2025-26 திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும் மற்றும் மோளப்பட்டியான் வட்டம் பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ. 31 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி