சேலம் மணக்காடு காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே ஆத்தூருக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த நிலை நீடித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்குவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், உடைந்து வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் சேதமடைந்த குழாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.