சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

796பார்த்தது
சேலம் மாநகரில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு
சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்த மாநகர போலீஸ் கமிஷனரின் அனுமதி கட்டாயம். நிகழ்ச்சிகள் நடத்த குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு திங்கட்கிழமை நள்ளிரவு முதல் வருகிற 8-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும். விளையாட்டு, திருமணம், இறுதி ஊர்வலம், மத நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.

தொடர்புடைய செய்தி