கோரிமேட்டை அடுத்த அய்யர் காலனியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கோபாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 2½ பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் திருட்டுப் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.