போதை மாத்திரை வழக்கில் ரவுடி சுற்றி வளைத்து கைது

2பார்த்தது
போதை மாத்திரை வழக்கில் ரவுடி சுற்றி வளைத்து கைது
சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி விக்ரம், போதை மாத்திரை வைத்திருந்த வழக்கில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்தார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள விக்ரமை போலீசார் நேற்று மாலை அவரது வீட்டின் அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :