சேலம்: கழுத்தை அறுத்து படுகொலை; ரவுடி, கள்ளக்காதலி கைது

1051பார்த்தது
சேலம்: கழுத்தை அறுத்து படுகொலை;  ரவுடி, கள்ளக்காதலி கைது
சேலம் அருகே வீராணம் வீமனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 29). சரக்கு வேன் டிரைவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்தநிலையில் குமரவேல் கடந்த 2-ந் தேதி இரவு கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் படுகொலை செய்யப்பட்டார். 

இதுகுறித்து வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக குமரவேலின் நண்பரும், ரவுடியுமான துளசிமணியூரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களான வீமனூர் மாணிக்கம், டி. பெருமாபாளையம் கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலி வசந்தியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி