சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த பால் மார்க்கெட் பாக்கு மொத்த வியாபாரி மகாலட்சுமி (45) நேற்று காலை தனது கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பணம் அடங்கிய பையை காணவில்லை. மற்றொரு வியாபாரியைப் பார்த்துவிட்டு வந்தபோது பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் மார்க்கெட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமி வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர் பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.