கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

6பார்த்தது
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சேலம் கிழக்கு கோட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோட்ட தலைவர் மோகன், செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 8-வது ஊதியக்குழு பரிந்துரையில் கிராமிய வங்கி ஊழியர்களை உறுதியாக சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி