சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா பால்குட ஊர்வலம்

3பார்த்தது
சேலம் அஸ்தம்பட்டி மகா மாரியம்மன், பிடாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 21ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 28ஆம் தேதி கம்பம் நடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை பால் குட ஊர்வலம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி