சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம்

1பார்த்தது
சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம்
தமிழ்நாட்டில் முதன்மை கல்வி அலுவலர்கள் 11 பேர் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) எழிலரசி பதவி உயர்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி (தொடக்கக்கல்வி) பதவி உயர்வு பெற்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். இந்த உத்தரவை அரசு முதன்மை செயலாளர் சந்தரமோகன் பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி