சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, 18 உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. பக்தர்கள் காணிக்கையாக ₹28 லட்சத்து 99 ஆயிரத்து 740 ரொக்கமாகவும், 83 கிராம் தங்கமாகவும், 565 கிராம் வெள்ளியாகவும் செலுத்தியுள்ளனர். இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி. என். சக்திவேல், உதவி ஆணையர் ராஜா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.