சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா நேற்று சேலம் கன்னங்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு டி. எம். செல்வகணபதி எம்.பி., மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் வரவேற்றுப் பேசினார். கலெக்டர் பிருந்தாதேவி பொதுமக்களுக்கு பயறுவகை விதை தொகுப்புகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், "வீடுதோறும் வளர்க்க பயறுவகை விதை தொகுப்பு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பேருக்கு ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்தில் வழங்கப்பட உள்ளது. இதனைப் பொருட்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கூறினார்.