சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

70பார்த்தது
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று மாவட்ட கட்சி அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ‘ஓரணியில் தமிழ்நாடு‘ என்ற கருப்பொருளில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

அவருடைய வழிகாட்டுதல்படி, சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 30 முதல் 40 சதவீதம் வரை வாக்காளர்களைக் கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும், சேலத்திற்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற உறுதி ஏற்போம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.