சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் அரவிந்த் (30), சிங்கப்பூரில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் பொறியாளர் ஜெயின் (25) இருவரும் 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு வீட்டாரின் சம்மதத்துடன், நேற்று சேலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழ் கலாசாரப்படி அரவிந்த், ஜெயின் கழுத்தில் தாலி கட்டி கரம் பிடித்தார்.