சேலத்தில் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை: வழக்கு பதிவு

72பார்த்தது
சேலத்தில் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை: வழக்கு பதிவு
சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கார் ஷோரூமில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். அதே ஷோரூமில் சேலத்தை சேர்ந்த அரவிந்த் என்பவரும் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பெண்ணுக்கு தவறான செய்கைகள், பேச்சு மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த தூய்மைப்பணிக்கான ஒப்பந்ததாரர் மகேஷ் என்பவரிடம் புகார் தெரிவித்தார். 

ஆனால் அவர் இதை கண்டுகொள்ளாமல் அனுசரித்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் அரவிந்த் அந்த பெண்ணுக்கு மீண்டும் பாலியல் தொந்தரவு கொடுக்க தொடங்கினான். அவரை அந்த பெண் கண்டித்துள்ளார். இதற்கிடையில் அந்த பெண் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அந்த பெண் பாலியல் தொந்தரவு குறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் விசாரணை நடத்தினார். இதையடுத்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரவிந்த் மற்றும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத மகேஷ் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி