அஸ்தம்பட்டி அம்மா உணவகத்தில் சிவக்குமார் எம்எல்ஏ ஆய்வு

5பார்த்தது
அஸ்தம்பட்டி அம்மா உணவகத்தில் சிவக்குமார் எம்எல்ஏ ஆய்வு
சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார், வடக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் நேற்று அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமையல் அறையில் உணவு சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் சரியாக செயல்படுகிறதா, மளிகை பொருட்கள் தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார். மேலும், உணவகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை குறித்தும், அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி