சேலம் மாநகராட்சியின் 9-வது வார்டில் உள்ள நுண்ணுயிர் தயாரிக்கும் மையத்தில் பாம்புகள் இருந்ததாகக் கிடைத்த தகவலை அடுத்து, மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் வனத்துறையினரின் உதவியுடன் விரைந்து சென்றார். அங்கு நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற என இரண்டு பாம்புகளை அவர்கள் பிடித்தனர். பிடிப்பட்ட பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் பணியாளர்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.