சேலம் அருகே தைலானூர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்-கலா தம்பதியினரின் மகன் ஹரிகிருஷ்ணன் (25) தறித்தொழிலாளி. நண்பர்கள் உள்ளிட்டோரிடம் சுமார் ரூ. 6 லட்சம் கடன் வாங்கியிருந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் பெற்றோர் தங்கள் நிலத்தை விற்று மகனின் கடனை அடைத்துள்ளனர். மீதமுள்ள ரூ. 13 லட்சத்தில், ரூ. 11 லட்சத்தை ஹரிகிருஷ்ணன் பெற்றோரிடம் வாங்கி செலவு செய்துள்ளார். மேலும் பணம் கேட்டபோது அவர் மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.